உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேவி கருமாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுடன் துவங்கியது விழா

தேவி கருமாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுடன் துவங்கியது விழா

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தேவி கருமாரியம்மன் கோவில் விழா, நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தேவி கருமாரியம்மன் சன்னதி உள்ளது. இக்கோவில் திருவிழா, நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, அக்னி கம்பம் நடப்பட்டது.16ம் தேதி பூண்டி அடிவாரத்தில், அபிஷேக பூஜை அன்னதானம் நடைபெற உள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை