உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

கோவை;கோவை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43. இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரும், மனைவியும் வெளியே சென்றிருந்தனர்.அப்போது இரண்டாவது குழந்தை, ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர், குழந்தைக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது நிறைவடைந்த, மூன்றாவது பெண் குழந்தை குளியலறைக்கு தவழ்ந்து சென்று, அங்கிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்தது.குழந்தையை காணவில்லை என தேடுகையில், வாளிக்குள் தவறி விழுந்தது தெரிந்தது. குழந்தையை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை