| ADDED : ஆக 09, 2024 02:39 AM
வால்பாறை;வால்பாறை, அரசு கலைக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை நகரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரியில் தற்போது, 980 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், முதல் ஆண்டில் மட்டும், 357 மாணவர்கள் படிக்கின்றனர்.கல்லுாரி வளாகத்தில், முதலாமாண்டு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் கூறியதாவது:வால்பாறை அரசு கல்லுாரியில், உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் சேறும், சகதியுமாக உள்ளதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும், கல்லுாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாடும் இடமாகவும் மாறிவருகிறது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கல்லுாரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.