உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட் வளாக பாரம்பரிய கட்டட புனரமைப்பு பணி துவங்க தாமதம்

கோர்ட் வளாக பாரம்பரிய கட்டட புனரமைப்பு பணி துவங்க தாமதம்

கோவை : பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோர்ட் கட்டடத்தை புனரமைக்க, 9.2 கோடி ரூபாய் ஒதுக்கி இரண்டு ஆண்டுகளாகியும், பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 1863ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த முன்சிப் கோர்ட் கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தில் ஏழு கோர்ட் மற்றும் வங்கி செயல்படுகிறது. 160 ஆண்டு பழமை வாய்ந்த இக்கட்டடம், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, அவற்றை புனரமைக்க 9.20 கோடி ரூபாய், 2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புனரமைப்பு பணிகள் துவங்க, இங்கு செயல்படும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக, ஐகோர்ட் நீதிபதிகள் குழுவினர், ஏற்கனவே ஆய்வு செய்தனர். ஒரே இடத்திற்கு கோர்ட்களை மாற்றும் வகையில் கட்டடம் தேடினர். ஆனால், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில், தேவையான கட்டடம் கிடைக்கவில்லை. சிங்காநல்லுாரில் மாநகராட்சி திருமண மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து, வெகு தொலைவில் இருப்பதாக கூறி, வக்கீல் சங்கம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், வேறு இடம் தேடினர். வேறு கட்டடம் கிடைக்காததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை