உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது தொழிலாளர் துறை

வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது தொழிலாளர் துறை

கோவை:தொழிலாளர் துறை வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெப்ப அலை தொடர்பாக தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் நலத்துறை உதவிகமிஷனர் ( அமலாக்கம்) காயத்ரி அறிக்கை:வெப்ப அலை தொடர்பாக தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய தணிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் பிரதிநிதிகளுடன் காலை 11:00 மணிக்கு கோவை மண்டல தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கோவையிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அங்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சரியான மற்றும் சுத்தமான கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் செய்து தர வேண்டும்.பணியாளர்கள் தங்குமிடம் சரியான இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு ஓய்வு மற்றும் சட்டப்பூர்வமான வேலை நேரம் ஆகியவை அமல்படுத்த வேண்டும். வேலை செய்யும் இடங்களில் போதுமான காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.பணியாளர்கள் மற்றும் மக்கள் அருந்துவதற்கு சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், எலக்ட்ரோலைட்டுகள், எலுமிச்சைசாறு, மோர் போன்றவை வெப்ப அலை வீசும் நாட்களில் தொழிலாளர்களுக்கு நீரேற்றமாக அமையும் வகையில் வழங்க வேண்டும்.மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியில் வெயில் நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீரிழப்பு நடைபெறும் போது, மது, டீ, காபி மற்றும் காற்றேற்றம் செய்த குளிர்பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். நீரிழப்பை தடுக்க தாகம் இல்லாவிட்டாலும் முடிந்தவரை அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை