உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடையில் குடிநீர் குழாய்: பிளிச்சி ஊராட்சியில் அவலம்

சாக்கடையில் குடிநீர் குழாய்: பிளிச்சி ஊராட்சியில் அவலம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சி, 6வது வார்டில், சாக்கடையில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து சின்னமத்தம்பாளையம், ரங்கராஜபுரம், கிரீன்சிட்டி, சுபாஷ் நகர், ஏ.டி., காலனி, கோட்டை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து, பிளிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் மூர்த்தி கூறுகையில், சாக்கடையில் குடிநீர் குழாய் செல்வதை அகற்றிவிட்டு, வேறு வழியாக குழாயை கொண்டு செல்ல வேண்டுமென பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. சாக்கடையில் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டால், சாக்கடை நீர் குடிநீர் குழாய்க்குள் சென்று, நோய் தொற்று அபாயம் ஏற்படலாம். ஊராட்சி நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ