உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிதாக மாறுகிறது குதிரை வண்டி கோர்ட்

புதிதாக மாறுகிறது குதிரை வண்டி கோர்ட்

கோவை:கோவையில் உள்ள பழமையான அடையாளங்களில் ஒன்றான, குதிரை வண்டி கோர்ட் வளாகம் புதுப்பிக்கும்பணி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.கோவை கலெக்டர் அலுவலகம் அருகே குதிரை வண்டி கோர்ட் உள்ளது; 130 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், போக்குவரத்துக்கு பயன்படுத்திய குதிரைகளை இவ்வளாகத்தில் கட்டி வைத்து பராமரித்ததாக, வரலாறு சொல்லப்படுகிறது. அதன்பின், இவ்வளாகத்தில் கோர்ட் செயல்பட்டதால், 'குதிரை வண்டி' கோர்ட் என்றே அழைக்கப்பட்டது. கலை அறிவியல் கல்லுாரி ரோட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டியதும், குதிரை வண்டி கோர்ட் வளாகம் பயன்பாடின்றி இருந்தது; புதர் மண்டி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறியது. அ.தி.மு.க., ஆட்சியில் புராதன சின்னமாக அறிவித்து, இக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. 2021ல் இப்பணி துவக்கப்பட்டது; 18 மாதங்களுக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ