கோவை : ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக, விரலில் வைக்கப்படும் அழியாத 'மை', கோவை மாவட்டத்துக்கு வந்து விட்டது.கோவை லோக்சபா தொகுதியில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்தும் பணியை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் அனைத்தும் சென்னையில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. தேர்தல் பிரிவினர் கூறியதாவது: ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவி பேட், கன்ட்ரோல் யூனிட், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மை, பதிவேடு உட்பட, 100 பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில், 65 பொருட்கள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்படுகின்றன. மீதமுள்ள பொருட்கள் விரைவில் வரும்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக் கூடிய, 'பேலட் ஷீட்' சென்னையில் அச்சடிக்கப்படுகிறது; 6ம் தேதி வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் உள்ள அச்சகம் ஒன்றில், தபால் ஓட்டுக்கள் அச்சடிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
என்னென்ன பொருட்கள்?
பென்சில், பால்பேனா, குண்டூசி, நுால், ஊசி, சீல் வைப்பதற்கான அரக்கு, கம், பேஸ்ட், தீப்பெட்டி, பிளேடு, துணி, கிளிப், மெழுகுவர்த்தி, ரப்பர் ஸ்டாம்ப், ரப்பர் பேண்ட், செல்லோ டேப், கார்பன் பேப்பர், பிளாஸ்டிக் ஸ்கேல், பேக்கிங் பேப்பர், செக் மெமோ, பூத் முகவர்களுக்கான பாஸ், கன்ட்ரோல் யூனிட் டேக், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கான டேக், காலி கவர் உட்பட, 41 வகையான ஸ்டேஷனரி பொருட்கள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அனுப்பப்படும். இவை கொஞ்சம் கொஞ்சமாக தருவிக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், போலீஸ் பாதுகாப்புடன் லாரியில், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்படும்,