உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கர்ப்பிணி அலைக்கழிப்பு விவகாரம்; விளக்கம் கேட்டு பறந்தது நோட்டீஸ்

கர்ப்பிணி அலைக்கழிப்பு விவகாரம்; விளக்கம் கேட்டு பறந்தது நோட்டீஸ்

கோவை : கணபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில், மாநகர் நகர் நல அலுவலர் விளக்கம் கேட்டு உள்ளார்.கோவை கணபதியை சேர்ந்தவர் செல்வி, 29; 5 மாத கர்ப்பிணியான இவர், கணபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனைக்கு சென்று வந்தார். குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்வதற்காக, ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கும்படி, மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர் ஆவணங்களை கடந்த, 7ம் தேதி மருத்துவமனையில் கொடுத்துள்ளார். ஆனால் அதனை உடனே பெறாமல், பணியில் இருந்த நர்சுகள் அலைக்கழித்து, 15 நாட்களுக்குப் பின் பெற்றுள்ளனர்.தினமும், தனது 2 வயது முதல் குழந்தையுடன், மருத்துவமனைக்கு வந்து செல்வதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக, கர்ப்பிணி தெரிவித்து இருந்தார். இது குறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கணபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்தனர்.மாநகர் நகர் நல அலுவலர் பூபதி கூறுகையில், “கணபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் உண்மை தன்மை கண்டறியப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை