உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறையில் ஆய்வு செய்தார் நீதிபதி

சிறையில் ஆய்வு செய்தார் நீதிபதி

கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ரமேஷ், ஒண்டிப்புதுார் திறந்த வெளிச்சிறையில் ஆய்வு செய்து, தண்டனை கைதிகளிடம் குறைகள் கேட்டார். சமையல் கூடத்தை பார்வையிட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தண்டனை கைதிகள், தங்கள் இல்லத்தினருடன் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் செய்யப்படுகிறதா என்பது பற்றியும் கேட்டறிந்தார். இதே போல, கோவை மாவட்டம், பொள்ளாச்சி துணை சிறையிலும், ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி