உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திரும்பி வந்தது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை

திரும்பி வந்தது மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில், சில மாறுதல்கள் செய்து தரக்கோரி, மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவையில், 'மெட்ரோ ரயில்' இயக்க, நான்கு வழித்தடங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தது. அப்போது, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

திட்ட அறிக்கை

அதில், முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உத்தேசமாக, 10 ஆயிரத்து, 740 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. மொத்தம், 39 கி.மீ., துாரத்துக்கு, 32 நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.சமீபத்தில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழு கள ஆய்வு செய்தபோது, 4.2 கி.மீ., துாரம் குறைக்கப்பட்டது. இறுதியாக, சத்தி ரோட்டில் 16 கி.மீ., என்பது, 14.4 கி.மீ., எனவும், அவிநாசி ரோட்டில், 23 கி.மீ., என இருந்ததை, 20.4 கி.மீ., ஆகவும் குறைக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசு அனுப்பியது.

திருப்பி அனுப்பிய மத்திய அரசு

நிதி ஆதாரத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தவும், மீதமுள்ள, 70 சதவீத தொகையை வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், கடனுதவி பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.இச்சூழலில், 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையில் சில மாறுதல் செய்து அனுப்புமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.'மெட்ரோ ரயில்' கொள்கைபடி, எந்த ஒரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டுமென்றால், அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விரிவான திட்ட அறிக்கையோடு, திட்டமிடப்படும் வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ள, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்த இயக்க திட்டமான சி.எம்.பி.,யும் (காம்ப்ரஹென்சிவ் மொபிலிட்டி பிளான்) அளிக்க வேண்டும்.அந்த குறிப்பிட்ட வழித்தடம், பொருத்தமாக இல்லை என்றாலோ அல்லது பல்வேறு காரணங்களால் கைவிடப்படும் சூழ்நிலை உருவானாலோ, வேறொரு புதிய வழித்தடத்துக்கு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும்.'மெட்ரோ ரயில்' திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, இவ்விரண்டு அறிக்கைகளை, 'மெட்ரோ ரயில்' கொாள்கைப்படி, மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், விரிவான திட்ட அறிக்கை மட்டும் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அதன் காரணமாக, திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விசாரித்தபோது, 'கோவைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையுடன் இணைக்க வேண்டிய சில ஆவணங்கள் இல்லாததால், திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அவற்றை சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் செய்து, விடுபட்ட ஆவணங்களை இணைத்து அனுப்புவர்' என்றனர்.

அரசின் கவனத்துக்குஅனுப்பப்படும்: எம்.பி.,

கோவை எம்.பி., ராஜ்குமாரிடம் கேட்டதற்கு, ''கோவை 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையில், திருத்தம் தேவைப்பட்டால், அவை சரி செய்யப்பட்டு, மத்திய அரசின் கவனத்துக்கு, மீண்டும் அனுப்பி வைக்கப்படும்,'' என பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Abdul Kalaam aazad
ஆக 25, 2024 22:40

ஏப்பா பொதும் நீங்க உருட்டுன உருட்டுல கந்தர்வகோட்டை சமாதானமே காலங்கிருச்சு ?


Kasimani Baskaran
ஆக 25, 2024 10:44

கட்டிங்கையும் சேர்த்து பணம் கேட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு திரும்ப அனுப்பியிருக்கிறது போல. ஏற்கனவே 200 கோடி அமுக்கியது பற்றி சிபிஐ விசாரணை தூங்குகிறது.


பாமரன்
ஆக 25, 2024 11:22

ஹை அஸ்கு புஸ்கு... விமான நிலையங்கள் போர்ட்டுகள் பவர் ப்ளாண்ட்கள் நம்ம ஸ்பான்ஸருக்கு குடுத்தப்ப என்னா கலெக்ஷன் / கட்டிங்னு கேட்டோமா... அதேபோல் ப்ராஜக்ட் எக்சிக்யூஷன் கட்டிங் எங்க ஏரியா... பின்னாட்களில் சிபீபீபீ இடீ அனுப்பி பங்கெல்லாம் கேட்கப்பிடாது... டீலா...?


ஆரூர் ரங்
ஆக 25, 2024 10:33

எல்லாத் திட்டங்களையும் மத்திய நிதி மற்றும் கடன் உத்திரவாதம் வழியே நிறைவேற்றி விட்டு பிறகு அவற்றின் மீது சம்பந்தமில்லாத கருணா, உதை, இன்பா படங்களை ஸ்டிக்கர் ஒட்டுவது. பேக்கேஜ் போட்டு தின்பது. பிறகு மத்திய அரசு நிதி கொடுக்காமல் வஞ்சிக்கிறது என்று 21 ம் பக்க கொத்தடிமை கட்சிகளை விட்டு போராட்டம் நடத்துவது. இதெல்லாம் புரிந்த பின்னும் மத்திய அரசு எப்படி உதவும்? குற்றப் பரம்பரை ஆட்சிக்கு உதவ அவர்கள் அறிவில்லாதவர்களல்ல.


Shekar
ஆக 25, 2024 09:58

இவர்கள் வேண்டுமென்றே தான் இந்த தவறை செய்கிறார்கள், இந்த ப்ராஜெக்ட் எடுக்கும் டாடா, எல்ன்டீ போன்ற கம்பனிகள் இவர்களுக்கு கமிஷன் வெட்டாதவை, அதனால் இந்த மெத்தனம். யாரும் கேள்வி எழுப்பினால் மத்திய அரசே திருப்பி அனுப்பிவிட்டது என்று கதைவிட இவர்களுடன் இவர்கள் ஊடகங்களும் சேர்ந்துகொள்ளும்


ஆரூர் ரங்
ஆக 25, 2024 09:41

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோவின் முதலீட்டு செலவு மிக அதிகம். லாபமீட்ட வாய்ப்பேயில்லை, கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்பதால் மத்திய அரசு நிதியுதவி செய்யத் தயங்குகிறது . கோவை மெட்ரோ பற்றியும் இதே பயம் உண்டு. இதற்கு காரணம் நாட்டிலேயே ரியல் எஸ்டேட் விலை( செயற்கையாக). இங்கு அதிகமாகி திட்டத்திற்கு நிலம் எடுப்பது கடினமாக உள்ளது. தமிழக அரசே கட்டி இயக்கினால் இலவச பயண சலுகை அளித்து பேருந்து கழக நிலைக்கே இட்டுச்செல்லும். திராவிஷத்தை நம்பி வாக்களித்த அறிவிலிகளுக்கு இது புரியாது.


பாமரன்
ஆக 25, 2024 08:59

இந்த பாஞ்சு நம்பரை பார்த்தாலே டென்ஷன் ஆவாங்கன்னு தெரியாதா..? நீங்க என்னத்தான் சரியாக அனுப்பினாலும் அடுத்ததா ஏன் கோட்டுக்கு கீழே கையெழுத்து போட்டே... கையெழுத்து புரியலை மாதிரி மிகவும் முக்கியமான காரணங்கள் காட்டி திரும்ப அனுப்பும் மத்திய அரசு. இதையே மத்திய அரசின் பங்களிப்பு இல்லாம செய்யப்போவதாக சொன்னால் உடனே பர்மிஷன் கிடைக்கும்... நமக்கும் கட்டிங்ல யாருக்கும் பங்கு குடுக்க வேண்டியது இல்லை. என்ன நான் சொல்றது


Saleem
ஆக 25, 2024 07:35

தமிழக அரசுக்கு இது தெரியாதா தமிழ்நாட்டில் ஏற்கனவேசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் பாட்டில் உள்ளது திட்ட அறிக்கை எப்படி தயாரிக்வேண்டும் என்று தமிழாய அரசுக்கு நன்றாக தெரியும் தெரிந்தும் சொதப்பியது ஏன் தமிழக அரசு கோவையை தொடர்ந்து புறக்கணிக்கிறது


கோபாலன்
ஆக 25, 2024 05:52

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க போகாதே என்பது முன்னோர் கூற்று.எந்த விதமான பெரிய அளவிலான செலவுகள் இல்லாமல் ஏற்கனவே உள்ள இரயில் பாதை வழியாக கோவை நகரில் சுற்று வழி சேவை துவங்கலாம்.கோவை,வட கோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர்,சூலூர்,சோமனூர், திருப்பூர் நிலையங்களை இணைத்து திரும்ப வரும் வழியில் இருகூர் போத்தனூர் தட வழியாக கோவை வந்து அடையுமாறு சென்னை, மும்பை நகரில் உள்ளது போல் MEMU இரயில் சேவை வழங்கலாம்.துவக்கத்தில் நான்கு பெட்டிகள் கொண்ட வண்டி சேவை அரை மணிக்கு ஒன்று போல் வழங்கலாம்.1950-60 சமயத்தில் இருந்தது போல் இருகூர் போத்தனூர் தடத்தில் சிங்காநல்லூர் (தெற்கு), நஞ்சுண்டாபுரம் ரயில் நிலையங்கள் திரும்பவும் துவங்கப்பட லாம்.இந்த சேவை துவங்கினால் திருச்சி, அவிநாசி சாலைகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நல்ல வாய்ப்பு உள்ளது.கையோடு இருகூர் போத்தனூர் தடத்தில் இரட்டை பாதை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.


A Viswanathan
ஆக 25, 2024 12:34

சென்னையை மற்றும் சுற்றி உள்ள ஊர்களை மட்டும் விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மற்ற மாவட்டங்களை எப்போது விரிவாக்கம் செய்வது.கோவை மெட்ரேர திட்டத்திற்காக எதையெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரியாதா.கோவைக்கு மெட்ரேர ரயில் வருவது இவர்களுக்கு ஆர்வம் இல்லை போன்று தோன்றுகிறது.


முக்கிய வீடியோ