உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் ஆபீசுக்கு வந்த தபால் ஓட்டு பெட்டிகள்

கலெக்டர் ஆபீசுக்கு வந்த தபால் ஓட்டு பெட்டிகள்

கோவை;ஓட்டு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லுாரியிலிருந்து, தபால் ஓட்டு எண்ணும் பெட்டிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.கோவை- தடாகம் சாலையிலுள்ள, அரசினர் பொறியியல் கல்லுாரியில், லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு கள் கடந்த ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.இச்சூழலில், அரசினர் பொறியியல் கல்லுாரியிலிருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டன.அதே போல், அரசினர் பொறியியல் கல்லுாரியில் இருந்த, 36 தபால் ஓட்டுப்பெட்டிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமிலும், கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள மாவட்ட கருவூலத்தில் உள்ள ஸ்ட்ராங்ரூமிலும் வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை