உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் செயல்படுகிறது வரி செலுத்தும் இணையதளம்

மீண்டும் செயல்படுகிறது வரி செலுத்தும் இணையதளம்

கோவை;வரியினங்கள் செலுத்தும் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் வரிதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை நகராட்சி நிர்வாகத் துறையின், https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக வரிதாரர்கள் செலுத்திவருகின்றனர்.கடந்த மாத இறுதி முதல் ஒரே சமயத்தில் பெரும்பாலானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முழுமையாக செயல்படுவதில் சுணக்கம் இருந்தது. கடந்த, 2ம் தேதி முழுமையாக செயல்படாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். தற்போது, இணையதளம் பராமரிக்கப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் வரிதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kalyanasundaram
மே 06, 2024 09:28

இந்த சைட் மூலம் பணம் செலுத்துவது இன்னமும் சிரமமாகத்தான் உள்ளது ஒருவர் லாக் இன் பக்கம் மூலம் உள்ளே நுழைய முடியவில்லை இது அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை