உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீரோடையில் கலக்கும் கிராமத்தின் கழிவுநீர்: கிணற்றின் நீராதாரம் பாதிக்கும்

நீரோடையில் கலக்கும் கிராமத்தின் கழிவுநீர்: கிணற்றின் நீராதாரம் பாதிக்கும்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் நீரோடை அருகே உள்ள கால்வாய் சீரமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கக்கடவு செல்லும் ரோட்டில் உள்ள நீரோடை அருகில், கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.இதில், வரும் கழிவு நீர் நீரோடையில் கலக்கும் படி உள்ளது. மேலும், இந்த நீரோடை அருகாமையில் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து செங்குட்டைபாளையத்தில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.கழிவு நீர் முழுவதும் கடைசியில் இந்த நீரோடையில் சேர்கிறது. தற்போது மழை பொழிவு அவ்வப்போது இருப்பதால், இங்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றில் கழிவு நீர் கலக்கும் என, அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மக்கள் கூறியதாவது:கிராமத்தில், மழை பெய்தால் மட்டுமே நீரோடை வழியாக நீர் செல்லும். இந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில், இருந்து வெளியேறும் நீரானது நீரோடையில் கலக்கும் வகையில் உள்ளது. இதன் அருகில் குடிநீர் கிணறு இருப்பதால், கழிவுகள் இந்த நீரில் கலக்க அதிக வாய்ப்புள்ளது.மேலும், இந்த கால்வாயில் வரும் கழிவு நீரானது செல்லாமல், நீரோடையில் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசும். மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் தாக்குதல் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.இதுமட்டும் இன்றி, இப்பகுதியில் கொசு அதிகரித்து வருகிறது. நீரோடையில் கழிவுநீர் கலப்பதால், நீர் ஆதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, கால்வாயில் வரும் நீரை தடுத்து நிறுத்தி, நீரோடையில் கலக்காதவாறு மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'நீரோடை அருகே உள்ள கால்வாய் சேதம் அடைந்து இருந்தது. இதை சீரமைத்து உள்ளோம். இதனால் மழைநீருடன், கழிவு நீர் சென்று விடும் என்றனர். மேலும், இங்கு தண்ணீர் தேங்கும் வாய்ப்பும் குறைவாக இருப்பதால், பொதுக்கிணற்றில் கழிவு நீர் கலக்காது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை