உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலாறு வெள்ளத்தில் வந்த மலைப்பாம்பால் பரபரப்பு

பாலாறு வெள்ளத்தில் வந்த மலைப்பாம்பால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பாலாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு வலையில் சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சண்முகபுரம் அருகே பாலாறு வெள்ளத்தில் மலைப்பாம்பு அடித்து வரப்பட்டது.மீன்பிடிக்க விரிக்கப்பட்ட வலையில், மலைப்பாம்பு சிக்கியது. அதில், வெளியே வர முடியாமல் தவித்த பாம்பு இறந்தது.மலைப்பாம்பு அடித்து வரப்பட்ட தகவலை அறிந்த அப்பகுதி மக்கள், பாலத்தில் திரண்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். வனத்துறையினர் இறந்த மலைப்பாம்பை மீட்டு எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை