உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

கோவை;கண்ணப்பநகர் முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம், நாளை (மே 22) நடக்கிறது.கோவை- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, கண்ணப்பநகர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த மே 14 அன்று, திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது.இன்று இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவத்துக்கு ஆபரணங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அம்மன் அழைத்தல், கரகம் அலங்கரிக்க தோட்டத்துக்கு புறப்படுதல், மே 22 காலை 5:00 மணிக்கு, சங்கனுார் கருப்பராயன் கோவிலிலிருந்து அக்னிசட்டி ஊர்வலம் மற்றும் சக்திகரகம் அழைப்பும், அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் நள்ளிரவு கம்பம் களையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 23 காலை 9:00 மணிக்கு, மஞ்சள் நீராடுதல், மதியம் 12:00 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை