உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருளுடன் மூன்று பேர் கைது

போதை பொருளுடன் மூன்று பேர் கைது

போத்தனூர்;கோவைபுதூர் அருகே, போதை பொருளுடன் நின்றிருந்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மணிகண்டன். நேற்று முன்தினம் மாலை குளத்துப்பாளையம் அருகே ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் விசாரித்தார்.அவர்கள் குனியமுத்தூர், சிந்து நகரை சேர்ந்த கிஷோர்குமார்,27, ஜெ.ஜெ., நகரை சேர்ந்த கவுதம், 27, சென்னை, சிட்டலபாக்கத்தை சேர்ந்த கோகுல், 23 என்பதும், விற்பனைக்காக மெத்தாம்பெட்டமைன் எனும் போதை பொருள், 7,5 கிராம், கஞ்சா, 170 கிராம் வைத்திருப்பதும் தெரியவந்தது.போதை பொருட்கள், நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ