உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சகோதயா பள்ளிகளுக்கான  த்ரோபால் போட்டி 

சகோதயா பள்ளிகளுக்கான  த்ரோபால் போட்டி 

கோவை:சகோதயா பள்ளி மாணவியருக்கான த்ரோபால் போட்டி, கீதாஞ்சலி பள்ளியில் நேற்று துவங்கியது. கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சார்பில் 45வது சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான, மாணவியர் த்ரோபால் போட்டி இரண்டு நாட்கள் நடக்கிறது. போட்டியை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கீதாஞ்சலி பள்ளி தலைவர் அழகிரிசாமி உடனிருந்தார்மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 81 அணிகள் பங்கேற்று, நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. நேற்று நடந்த போட்டி முடிவுகள்: 14 வயது பிரிவில், கீதாஞ்சி பப்ளிக் பள்ளி 2 - 0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியையும், நவ பாரத் பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், ஜி.ஆர்.டி., பப்ளிக் பள்ளியையும் வீழ்த்தின. 17 வயது பிரிவில் கீதாஞ்சலி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் கிக்கானி குளோபல் அகாடமியையும், அனன் சர்வதேச பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், கோவை வித்யாஸ்ரம் பள்ளியையும் வீழ்த்தின. 19 வயது பிரிவில் ஜி.ஆர்.டி., பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் வித்யா நிகேதன் பள்ளியையும், அல்கேமி பள்ளி அணி 2- 0 என்ற செட் கணக்கில் எம்.டி.என்., பியூட்சர் பள்ளியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ