பொள்ளாச்சி: 'தேவராயபுரத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் முன்னிலை வகித்தார்.தேவராயபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு, தேவராயபுரத்தில், மதுரை வீரன் கோவிலில், 100 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். மேலும், மாகாளியம்மன், முருகன் கோவிலும், தென்னை மரங்கள் வளர்ந்துள்ளது.திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடத்தப்படுகிறது. மதுரைவீரன் கோவில் திருப்பணிகள் தற்போது நடக்கிறது. இந்நிலையில் கோவில் பயன்பாட்டுக்காக விடப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்ட கடந்த சில மாதங்களாக தனி நபர் ஒருவர், உறவினர்களுடன் முயற்சித்து வருகிறார். கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதியில்லை
வள்ளலார் நகர், காஸ்மோ வில்லேஜ், சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள வள்ளலார் நகர், காஸ்மோ வில்லேஜ், சக்தி நகர், பொன் நகர், சாய் நகர், செல்லப்பம்பாளையம் பிரிவு ஊஞ்சவேலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் இல்லை.ரோடு, குடிநீர் இணைப்பு, நிழற்கூரை மற்றும் சாக்கடை வசதிகள் இல்லை. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.