குருஷேத்ரா போட்டிகள்
ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெறுகிறது. கேரம், செஸ், பேட்மிட்டன், இன்டோர் கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால், த்ரோபால் உள்ளிட்ட ஏழு வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன. பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி நேரடியாகவும் பங்கேற்று களம் காணலாம். நேரம்: காலை, 9:00 மணி. ஆர்ட் தெரபி
ஓவியம், இசை, நடனம் போன்ற அனைத்து கலைகளும், நம் மனிதர்களுக்கான சிகிச்சை முறைகளே. ஹோப் காலேஜ் பகுதியில் அதுல்யா அகாடமி சார்பில், இன்று ஓவியம் வரைதல் குறித்த அனைத்து வயதினருக்குமான பயிற்சி, இரண்டாம் நாளாக இன்று நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 95004 55002 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம். பட்டமளிப்பு விழா
ஒவ்வொரு பெற்றோரின் கனவு நாள் என்பது, அவரவர் பிள்ளைகளின் பட்டமேற்பு விழாவை பார்ப்பதுதான். கோவை காருண்யா பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா, இன்று பல்கலை அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்வு மதியம், 2:00 மணிக்கு துவங்குகிறது. மாணவர் மன்றங்கள்
ஒவ்வொரு மாணவர்களின் திறன் மேம்பாட்டில், கல்லுாரிகளின் மன்ற செயல்பாடு பங்களிப்பு பெரும் அளவில் உள்ளது. கோவை குரும்பம்பாளையம் ஆதித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் 2024ம் ஆண்டுக்கான மாணவர் மன்ற துவக்கவிழா இன்று நடைபெறுகிறது. காலை, 10:30 மணிக்கு நிகழ்வுகள் கல்லுாரி அரங்கில் துவங்குகின்றன. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது. கீதை சொற்பொழிவு
இஸ்கான் இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ கோவில் பெருமாள் கோவில் வளாகத்தில், மாலை 6:00 மணிக்கு 'கீதை காட்டும் பாதை' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து கீர்த்தனைகள் பாடப்படவுள்ளன. நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கோவை மேற்கு இன்னர் வீல் கிளப் சார்பில், 2024-25ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று நடக்கிறது. ஆர்.எஸ்.புரம் மகளிர் கிளப் அலுவலகத்தில் நடைபெறும் இந்நிகழ்வு, காலை, 10:30 முதல் 11:00 மணி வரை நடக்கிறது. கணக்காளர் தேசிய மாநாடு
ஐ.சி.ஏ.ஐ., சார்பில், 'சங்கமம்' என்ற பெயரில், தேசிய அளவிலான பட்டய கணக்காளர் மாணவர்களுக்கான கருத்தரங்கு, இரண்டாம் நாளாக இன்று நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்வில், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவர்களிடம் பேசவுள்ளனர்.
சிறப்பு பூஜை
*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.