உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில்  இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் 

மாநகரில்  இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் 

ஆராதனை விழா

மத்வராயபுரம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா, நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்தர சுவாமி மடத்தில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை, 6:00 மணிக்கு நிர்மால்யம், 8:00 மணிக்கு பஞ்சாம்ருத அபிஷேகம், 9:45 மணிக்கு உபன்யாசம், 10:30 மணிக்கு கனகாபிஷேகம், இரவு 8:00 மணிக்கு ரக உற்சவம், மந்தரபுஷ்பம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நட்பே... நட்பே

*கல்லுாரி நட்பு காலத்திற்கும் நம் மனதில் பசுமையாக படர்ந்து இருக்கும். மீண்டும் ஒரு முறை வாராத அந்த நாட்கள் என்ற எண்ணம், நம் அனைவருக்கும் அவ்வப்போது எட்டிப்பார்த்து இருக்கும். அந்த எண்ணத்தை நிறைவேற்ற, இன்று திருமலையாம்பாளையம் நேரு மேலாண்மை கல்லுாரியில், காலை, 10:00 மணிக்கு கல்லுாரி அரங்கில் நிகழ்வு நடைபெறவுள்ளது . * பள்ளி நண்பர்கள் என்றால் சொல்லவா வேணும். கள்ளம்கபடம் இன்றி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நட்பு, பள்ளி பருவத்தில் ஏற்படும் நட்பே. கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில், 1992-1994 ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கும் நிகழ்வுகள், நாளை மாலை, 5:30 மணி வரை தொடர்கிறது.

புத்தகத்திருவிழா

பிள்ளைகளை எங்கு அழைத்து செல்கிறோமோ இல்லையோ.. கட்டாயம் அழைத்து செல்லவேண்டிய இடம், புத்தக திருவிழாக்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தக திருவிழா, கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது. காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்துவையுங்கள்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில், ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி அரங்கில் நடைபெறுகிறது. காலை, 10:00 முதல் 4:30 மணி வரை இந்நிகழ்வு நடக்கிறது.

மகிழ்வி கொண்டாட்டம்

குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின், மகிழ்வி அமைப்பு சார்பில் , மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம், விருது வழங்கும் நிகழ்வு இன்று, மாலை 5:00 மணியளவில் கல்லுாரி அரங்கில் நடைபெறவுள்ளது.

ஆடி கண்காட்சி

டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, பூம்புகாரில் ஆடி விற்பனை கண்காட்சி காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறவுள்ளது. கைவினை பொருட்கள், அலங்கார பொருட்கள், கடவுள் சிலைகள் என பல பிரத்யேக பொருட்களை இங்கு வாங்கலாம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். இதற்கான விழிப்புணர்வு முகாம், நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ