பாண்டிமேளம் உற்சவம்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'பாண்டி மேளம்' உற்சவம் என்ற தலைப்பில், தாளமும், மேளமும், நடனமும் இணைந்த உற்சாகக் கொண்டாட்டம் நடக்கிறது. வடசேரி சிவநாராயணன் குட்டி மற்றும் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் அதிரவைக்கும் செண்டை நிகழ்ச்சி மற்றும் நர்த்தனம் நடக்கிறது. கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. நுால் அறிமுக விழா
பீளமேடு, பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜியில்,சத்குருவின் புதிய நுால், 'கர்மா விதியை வெல்லும் சூத்திரங்கள்' அறிமுக விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நடக்கும் விழாவில், மரபின் மைந்தன் முத்தையா, எழுத்தாளர் சுமதி பங்கேற்கின்றனர். விழிப்புணர்வு சிறப்புரை
சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. சூலுார், முத்துக்கவுண்டன்புதுார்,சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை, 'தர்மத்தின் பார்வையும் பாதையும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது. முப்பெரும் விழா
கம்மவார் கல்ச்சுரல் அகாடமியின் துவக்க விழா, மகா சங்கல்ப அறிமுக விழா மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்ட துவக்க விழா, ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. நவஇந்தியா அருகே, எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில், காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. தொடக்க விழா
நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளை தொடக்க விழா, நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்புகள் ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் வசதியற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை அளிக்கும் நோக்கில் அறக்கட்டளை தொடங்கப்படுகிறது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பேரூர், சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், 10:00 மணி முதல் நடக்கும் நிகழ்வில், பல்வேறு மாநிலங்களிலிருந்து முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை
சேவாபாரதி மற்றும் ஏ.வி.பி., மற்றும் மாங்கரை ஆயுர்வேத மருத்துவமனை சார்பில், இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், சத்குரு சேவாஸ்ரமத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. மருத்துவ ஆலோசனை
பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்துகின்றன. பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளியில், காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.