உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 885 வீடுகளிலும் கழிப்பறை; அசத்தும் அல்லப்பாளையம்

885 வீடுகளிலும் கழிப்பறை; அசத்தும் அல்லப்பாளையம்

அன்னுார் ; அல்லப்பாளையம் ஊராட்சியில், நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தமிழக அரசு, திட மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை முன்மாதிரி கிராமமாக அறிவிக்கும்படி தெரிவித்துள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், அல்ல பாளையம் மற்றும் அக்கரை செங்க பள்ளி ஊராட்சிகள் இதில் தேர்வு செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்ட 19 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அல்லப்பாளையம் கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வெங்கிடுபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கக்கோரி விண்ணப்பங்கள் அளித்தனர்.ஊராட்சி செயலர் ராஜகோபால் பேசுகையில்,ஊராட்சியில் மொத்தம் உள்ள 885 வீடுகளிலும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என்றார்.கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீமன், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ