உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வணிகக் கடைகளுக்கு நாளை விடுமுறை

வணிகக் கடைகளுக்கு நாளை விடுமுறை

பொள்ளாச்சி : லோக்சபா தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.ஓட்டுப்பதிவு நடக்கும் 19ம் தேதி, அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. தவிர,தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் என, அனைத்துக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வகையில், பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், நாளை (19ம் தேதி) விடுமுறை அளிக்க வேண்டும், என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை