உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

கோவை : கோவையிலுள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், நடப்பாண்டு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் கிராந்தி குமார் அறிக்கை: கோவை- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வரும் 16 வரை(நாளை வரை) நடைபெறவுள்ள நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு வயது வரம்பு இல்லை. சிறப்பு கட்டணம் வசூலிப்பதில்லை.இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளும், ஆறு மாத தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் மிதிவண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை