உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.பி.ஜி., நினைவு கோப்பை க்கான போட்டி; எம்.டி.என்., பி.எஸ்.ஜி.ஜி., பள்ளிகள் வெற்றி 

பி.பி.ஜி., நினைவு கோப்பை க்கான போட்டி; எம்.டி.என்., பி.எஸ்.ஜி.ஜி., பள்ளிகள் வெற்றி 

கோவை : பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'பி.பி.ஜி., நினைவு கோப்பை' என்ற பெயரில் மாவட்ட அளவில் மாணவர் கோ கோ, மாணவியர் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை, பி.பி.ஜி., கல்லுாரியின் துணை தலைவர் அக்சய், தாளாளர் சாந்தி, முதல்வர் நந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதன் கோ கோ மற்றும் வாலிபால் போட்டியில், தலா 10 பள்ளி அணிகள் பங்கேற்று, நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. மாணவர்களுக்கான கோ கோ இறுதிப்போட்டியில், எம்.டி.என்., பியூட்சர் பள்ளி அணி 12 - 10 என்ற புள்ளிக்கணக்கில், சி.ஆர்.ஆர்., மெட்ரிக்., பள்ளியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது. மூன்றாமிடத்துக்கான போட்டியில், நேஷனல் மாடல் பள்ளி அணி, 10 - 9 என்ற புள்ளிக்கணக்கில் டி.கே.எஸ்., அணியை வீழ்த்தியது. மாணவியர் வாலிபால் இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில், வி.சி.வி., சிசு வித்யோதயா பள்ளியை வீழ்த்தியது. மூன்றாமிடத்துக்கான போட்டியில், கிருஷ்ணம்மாள் பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ