உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய தொழில்நுட்பம் குறித்து தென்னை கள சார்பு பயிற்சி

புதிய தொழில்நுட்பம் குறித்து தென்னை கள சார்பு பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆவலப்பம்பட்டியில் தென்னை கள சார்பு பயிற்சி முகாம் நடந்தது.தென்னை விவசாயத்தில் தற்போது ஏராளமான பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தென்னையை தாக்கும் வெள்ளை ஈ மற்றும் வேர் வாடல் போன்றவை, அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.தென்னை விவசாயிகளுக்கு உர நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தோட்டக்கலைத்துறை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், விழிப்புணர்வு பயிற்சி முகாம், ஆவலப்பம்பட்டியில் நடந்தது.இப்பயிற்சியில், தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் அருள்பிரகாஷ், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். நோய்களை தாக்கும் திறனுடைய ரகங்கள், நீர், உர மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.மேலும், தோட்டத்தில் தென்னையின் புதிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்