| ADDED : மே 16, 2024 06:20 AM
உடுமலை : பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இத்திட்டத்தினக கீழ், உடுமலை மானுப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாய இடுபொருட்களான, நுண்ணுயிர் கரைசல், ஹியூமிக்கின் பயன்கள் மற்றும் அவைகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.இயற்கை வேளாண்மையால், சாகுபடி செலவு குறைகிறது. மண் வளம் பெருகுவதோடு, மகசூல் அதிகரிக்கும். நஞ்சில்லா உணவு பொருட்கள் உற்பத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.முகாமில், வேளாண் கல்லுாரி மாணவியர், அகரம் வேளாண் ஆராய்ச்சி நிறுவன நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.