உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் பணியாற்றிய 5 நீதிபதிகள் இடமாற்றம்

கோவையில் பணியாற்றிய 5 நீதிபதிகள் இடமாற்றம்

கோவை;கோவையில் பணியாற்றிய, மேலும் ஐந்து நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோவை தனிக்கோர்ட் (குண்டுவெடிப்பு வழக்கு) நீதிபதி சந்திரசேகரன், ஊட்டி லேபர் கோர்ட்டிற்கும், கோவை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஹரிஹரன், கோவை வணிகவியல் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டனர்.கோவையில் காலியாக இருந்த, முதன்மை குடும்ப நீதிமன்றத்திற்கு, ஆரணி விரைவு கோர்ட் நீதிபதி விஜயா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கூடுதல் குடும்ப நீதிமன்ற நீதிபதி முரளிதரன், திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக,ஸ்ரீ வில்லிபுத்துார் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி காஜரா ஜிஜி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை இ.சி., கோர்ட் நீதிபதி லோகேஸ்வரன், மதுரை கனிம வள வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வணிகவியல் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரவி, சென்னையிலுள்ள விற்பனை வரி தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை