உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாகராஜபுரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு,38, புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா,30 ஆகிய இருவரையும், கைது செய்தனர். அவர்களிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை