உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டீக்கடைக்காரருக்கு கத்திக்குத்து: இருவர் கைது

டீக்கடைக்காரருக்கு கத்திக்குத்து: இருவர் கைது

சூலுார்:சுல்தான்பேட்டை அருகே டீக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.சுல்தான்பேட்டை அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் பழனிசாமி, 36. பச்சாபாளையம் பிரிவில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரில், உடுமலை அடுத்த மைவாடியை சேர்ந்த முருகானந்தம், 45 என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, டீக்கடைக்கு சென்ற முருகானந்தம், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பழனிசாமியும் தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதில் ஆத்திரமடைந்த முருகானந்தம், கத்தியால் பழனிசாமியை குத்தி விட்டு தப்பினார். காயமடைந்த பழனிசாமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுல்தான்பேட்டை போலீசார், முருகானந்தம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொப்பம்பட்டியை சேர்ந்த கந்தசாமி, 37, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி