பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பழுதடைந்த கோழி பண்ணையை அகற்றும் போது, சுவர் விழுந்து பண்ணை உரிமையாளர், வடமாநில தொழிலாளி இருவர் இறந்தனர்; மூவர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சமத்துார் ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம்,45. இவருக்கு சொந்தமான காயர் நிறுவனம், கெங்கம்பாளையத்தில் இயங்குகிறது.நிறுவன வளாகத்தில், பழுதடைந்த நிலையில் உள்ள, கோழிப்பண்ணை கட்டுமானத்தை அகற்றும் பணியில், முருகானந்தம், அவரது மனைவி ரேவதி,40, மற்றும், மூன்று வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது, கோழிப்பண்ணையின் ஹாலோ பிளாக் கற்களாலான ஆறு அடி உயரமுள்ள சுவர் சரிந்து விழுந்தது. அதில், கோல்கட்டாவை சேர்ந்த மொமதாசிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காயமடைந்த ரேவதி, கோல்கட்டாவை சேர்ந்த ரபிந்திரசிங்,40, கொனமிகா சிங்,20, ஆகியோர் பொள்ளாச்சியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.பழுதடைந்த கோழிப்பண்ணை கட்டட சுவர் இடிந்து விழுந்து, இருவர் இறந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.