உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பில்லாத ரவுண்டானாக்கள்; அடையாள சின்னங்கள் என்னாச்சு!

பராமரிப்பில்லாத ரவுண்டானாக்கள்; அடையாள சின்னங்கள் என்னாச்சு!

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள ரவுண்டானாவில், பொள்ளாச்சியின் அடையாள சின்னங்களை அமைத்து அழகுபடுத்த வேண்டுமென கோாரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நிலம் கையகப்படுத்தப்பட்டு, 34.51 கோடி ரூபாய் நிதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் கட்டும் பணி மற்றும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது. இந்த ரவுண்டானாவில், பொள்ளாச்சியின் அடையாள சின்னங்கள் அமைக்கப்படும் என, விரிவாக்கப்பணியின் போது கூறப்பட்டது.ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளதால், ரவுண்டானா புதர்கள் மண்டி காணப்படுகிறது. ரவுண்டானாவில் வளர்ந்துள்ள புதர்களை அவ்வப்போது அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ரவுண்டானா அமைத்து, பொள்ளாச்சியின் அடையாளமான தென்னை மரம், ரேக்ளா வண்டி போன்றவை அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல் உள்ளது.தன்னார்வலர்கள் வாயிலாக கூட, ரவுண்டானாக்களில் அடையாள சின்னங்களை வைக்கலாம். பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதுடன், நகரின் அழகை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ