உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மக்களை கவரும் வனாலயா வில்லாக்கள்!

கோவை மக்களை கவரும் வனாலயா வில்லாக்கள்!

கோவை;மெரிஸ்டோன் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், வனாலயா எனும் பிரம்மாண்டமான தனித்தனி சொகுசு வில்லாக்கள் திட்டம், நீலாம்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான, பென்னி குரியாகோஸ் மூலம் வில்லாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 முதல் 23 சென்ட் வரையிலான தாராளமான வில்லாக்கள் மற்றும் வீடுகள் 6ஆயிரத்து 130 சதுர அடி முதல் அமைந்துள்ளன.விரிவான நிலப்பரப்புடன், ஆடம்பரமான வடிவமைப்புடன் இயற்கை எழில் கொஞ்சும், வனாலயா சொகுசு வில்லாக்கள், மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 14 வில்லாக்களில் இரண்டு மட்டுமே மீதமிருக்கின்றன.மெரிஸ்டோன் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் விஸ்வநாதன் கூறுகையில், ''வனாலயாவின் துவக்கம், கோயம்புத்தூரின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. குடியிருப்பவர்களின் வாழ்க்கை முறையை, மேம்படுத்தும் விதமாக அனைத்து வசதிகளையும் வழங்குவதுடன், இயற்கையான சூழலில், நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்,'' என்றார்.மேலும் விபரங்களுக்கு, 96264 33000, 96267 33000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ