உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிப்பு விறுவிறுப்பு  

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிப்பு விறுவிறுப்பு  

கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி உள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கோவை உக்கடம், செல்வபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி துவங்கி விட்டது. இங்கு சிறிய விநாயகர் சிலை முதல் 10 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் வரை தயாராகி வருகிறது. சிலை தயாரிப்பாளர் சரவணகுமார் கூறுகையில், ''கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி என, வரிசையாக பண்டிகை வருகிறது. அதனால் இப்போதிருந்து எல்லா சிலைகளையும் தயாரிக்க துவங்கி இருக்கிறோம். விநாயகர் சதுர்த்திக்கு அதிகம் சிலைகள் விற்பனையாகும். ஐந்து இன்ஞ் முதல் 10 அடி வரை சிலைகள் செய்கிறோம். தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் ரசாயனம் இல்லாமல் களிமண், அதற்கு மேல் காகித கூழ் பயன்படுத்துகிறோம். திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வரை இங்கிருந்து சிலை தயாரித்து அனுப்புகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை