உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?

கால்பந்து பயிற்சியாளர் பணியில் சேர வேண்டுமா?

கோவை;கேலோ இந்தியா திட்டத்தின் நிதியுதவியில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், கேலோ இந்தியா திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சி மையம், நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 100 வீரர் - வீராங்கனைகளுக்கு, தினசரி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பயிற்சியாளர்களாக பணியாற்ற, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகள், அகில இந்திய பல்கலை போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், சீனியர் தேசிய போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கோவையில் வசிப் பவராக இருக்க வேண்டும் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்). பயிற்சியாளர்களுக்கு 11 மாதங்களுக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தற்காலிகமான பணியாகும்.இதற்கான விண்ணப்பங்களை, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் (நேரு ஸ்டேடியம்) இருந்து பெற்றுக்கொண்டு, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கான நேர்முக தேர்வு நேரு ஸ்டேடியத்தில், வரும், 14ம் தேதி நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை