உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடைந்த குழாயில் வீணாகும் தண்ணீர்

சேதமடைந்த குழாயில் வீணாகும் தண்ணீர்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, யூனியன் பேங்க் அருகே உள்ள பேரூராட்சி வணிக வளாகம் முன் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறியதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், யூனியன் பேங்க் அருகே பேரூராட்சி வணிக வளாகம் செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.இந்த வணிக வளாகத்தின் முன்பாக உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் பாதையில் வழிந்தோடி சாக்கடை கால்வாயில் கலந்தது. இதனால் மக்கள் வாகனங்களை நிறுத்த சிரமப்பட்டு, ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி சென்றனர். பஸ் பயணியர் அவ்வழியில் செல்ல சிரமம் நிலவுகிறது.கோடை வெயில் காலத்தில், தண்ணீருக்காக மக்கள் அலைமோதும் நிலையில், தண்ணீர் வீணாகி ரோட்டில் செல்வதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக குழாய் கசிவை சரி செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ