உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில், சொத்து வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. தற்போது வரிகள் மற்றும் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெறுகின்றன. நகராட்சி சார்பில் சங்கர் நகரில் சிறப்பு முகாம் அமைத்து, வரிகள், குடிநீர் கட்டணம் வசூல், உரிம கட்டணம் புதுப்பித்தல் ஆகிய பணிகள், மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியதாவது: நகராட்சியில் இதுவரை, 90 சதவீதம் வரிகள் வசூல் ஆகியுள்ளது. இன்னும், 63 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளன.அதேபோன்று இதுவரை, 80 சதவீதம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளன. இன்னும், 56 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது. மேலும் நகராட்சி கடைகளின் வாடகை, 20 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது. மேலும் வருகிற, 15, 16 மற்றும் 22, 23 ஆகிய தேதிகளில், நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை வரிகள், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !