உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வயநாடு நிலச்சரிவு எதிரொலி; கோத்தகிரி சாலையில் ஆய்வு

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; கோத்தகிரி சாலையில் ஆய்வு

மேட்டுப்பாளையம் : கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக,கோத்தகிரி சாலையில் ஆய்வு செய்ய வல்லுனர் குழு திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட கன மழை காரணமாக, மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் விழுந்ததில், சுமார் 3 நாட்கள் வரை போக்குவரத்து பாதித்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கேரளா வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதின் எதிரொலியாக, கோத்தகிரி சாலையில் மாநில நெடுஞ்சாலை துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நிலச்சரிவான பகுதிகளில் தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, இச்சாலையில் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகிறோம். திடீரென நிலச்சரிவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கவும், போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட வியூ பாயிண்ட், குஞ்சப்பனை ஆகிய இடங்களில் இன்னும் சில நாட்களில் வல்லுனர் குழு ஆய்வு செய்ய உள்ளது.அந்த இடங்களில் கான்கிரிட் சுவர் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை