| ADDED : ஜூலை 02, 2024 01:22 AM
கோவை;கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா வணிகவியல் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, நேற்று நடந்தது.முதல்வர் ராதிகா வரவேற்றார். சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மற்றும் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், இந்தியா முன்னேற்றமடைந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பயப்படுகின்றன. சர்வதேச அளவில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்னும் பல வாய்ப்புகள் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேல் பேசுகையில், எந்த படிப்பை தேர்வு செய்து படித்தாலும், வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் பணியாற்றுங்கள். அதுவே நம் நாட்டின் முன்னேற்றமாக இருக்கும். வசதியானவர்கள்தான் முன்னேற முடியும் என்ற நிலை, இப்போது இல்லை, என்றார்.கல்லுாரியின் இணை செயலாளர் சந்தியா, இணை துணை செயலாளர் நித்யா, கல்யாணராமன், அறங்காவலர் பட்டாபிராமன் பங்கேற்றனர்.