உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கையை எப்போ நிறைவேத்துவீங்க! போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

கோரிக்கையை எப்போ நிறைவேத்துவீங்க! போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

கோவை:கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தை (சி.ஐ.டி.யு.,) சேர்ந்த ஊழியர்கள், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இதுதொடர்பாக, போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:சேவைத்துறை அடிப்படையில், போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டுமென கோரி வருகிறோம். இதற்கான அரசாணையை, 2022ல் தி.மு.க., அரசு வெளியிட்டது. ஆனால், இரு ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 18 மாதமாக ஓய்வு கால பலன் வழங்கவில்லை; எப்போது கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இல்லை.காலியாக உள்ள, 25 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக, அரசு பஸ்களை முழுமையாக இயக்க முடிவதில்லை. விடுப்பு மறுப்பு, வேலைப்பளுவால் தொழிலாளர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 5,000க்கும் மேற்பட்ட இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். வாரிசு வேலை மறுக்கப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவோம் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 24 மணி நேர பட்டினிப் போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்