உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யாருக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்?

யாருக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்?

சூலூர்:சூலூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான, மூன்றாம் கட்ட பயிற்சி முகாம், சூலூர் தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி தலைமையில் நடந்த முகாமில், ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் பயிற்சியாளர்கள் பேசியதாவது: தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறித்த நேரத்தில், மாதிரி ஓட்டுப்பதிவை துவங்க வேண்டும். அதன்பின், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், மாதிரி ஓட்டுபதிவில் பதிவான ஓட்டுகளை அழிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பார்வையற்றோர் ஓட்டளிக்க வரும் போது, அவருக்கு உதவி செய்ய வரும் நபருக்கு, வலது கை ஆள் காட்டி விரலில், மை வைக்க வேண்டும். ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள், அதிகாரிகளுக்காக, அவரது குடும்ப உறுப்பினர் ஓட்டளிக்க வருவர். அதுகுறித்த பட்டியலை சரிபார்த்து, அவரை அனுமதிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நபர், ஓட்டளிக்க, இடது கை ஆள் காட்டி விரலிலும், பதிலி ஓட்டுக்காக, அவரது வலது கை ஆள் காட்டி விரலிலும், மை வைக்க வேண்டும்.இவ்வாறு, பயிற்சியில் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை