உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்பு நகர் மக்களிடம் கொஞ்சம் பாசம் காட்டுவாரா நம் கலெக்டர்?

அன்பு நகர் மக்களிடம் கொஞ்சம் பாசம் காட்டுவாரா நம் கலெக்டர்?

கோவை:மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இ.கம்யூ., மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பராமரிக்கப்படும், மலுமிச்சம்பட்டி அன்பு நகர் அடுக்குமாடி குடியிருப்பில், 700 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு, குடிநீர், போக்குவரத்து, ஆரம்ப சுகாதார நிலையம், குப்பை, சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக வாரிய அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம்.இக்குடியிருப்பில், 'செப்டிக் டேங்க்' அனைத்தும் நிரம்பி குழாய்கள் வழியாக வெளியேறுவதால் துர்நாற்றம், நோய் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். இங்கு வசிப்பவர்களிடம்சிலர், பராமரிப்பு பணி எனக்கூறி மாதம் தோறும் ரூ.100 வசூலிக்கின்றனர்.ஆனால், எந்த பணியும் நடப்பதில்லை. வெயில் வாட்டும் நிலையில், குடிநீர் இல்லாமல் குழந்தைகள், முதியோர் அவதிப்படுகின்றனர்.இங்கு வசிக்கும் அனைவருக்கும் தண்ணீர், குடிநீர் வசதி வழங்குவதுடன், 'செப்டிக் டேங்க்', சாக்கடை சுத்தம் செய்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை