உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீஸ் இடம் மாற்றப்படுமா?

போஸ்ட் ஆபீஸ் இடம் மாற்றப்படுமா?

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, போஸ்ட் ஆபீஸ் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ் முதல் தளத்தில் இயங்கி வருகிறது.போஸ்ட் ஆபீஸ்க்கு, தினமும் பல்வேறு சேவைகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், சேமிப்பு கணக்கு மற்றும் பிற சேவைகள் பெறுவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.இந்த போஸ்ட் ஆபீஸ்க்கு வரும் வயதானவர்கள், மாடிப்படி ஏறி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் படி ஏற முடியாமல், பிறரின் உதவியுடன் போஸ்ட் ஆபீஸ்க்கு வரும் நிலை உள்ளது. எனவே, போஸ்ட் ஆபீஸ் வரும் மக்களின் நலன் கருதி, வேறு பகுதியில் தரை தளத்தில் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !