உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அணை பராமரிக்கும் பொறுப்பு வசமாகுமா, நிஜமாகுமா! மாநகராட்சி வசம் கொண்டு வர ஆலோசனை

சிறுவாணி அணை பராமரிக்கும் பொறுப்பு வசமாகுமா, நிஜமாகுமா! மாநகராட்சி வசம் கொண்டு வர ஆலோசனை

கோவை:சிறுவாணி அணையை பராமரிக்கும் பொறுப்பை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து மீண்டும் மாநகராட்சி வசம் கொண்டு வருவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில், கேரள வனப்பகுதியில், சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. உலக வங்கி நிர்ப்பந்தம் காரணமாக, சிறுவாணி குடிநீர் திட்டத்தை, 20 ஆண்டுகளுக்கு முன், 1984ம் ஆண்டு ஏப்., முதல் பராமரிப்பு செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது; ஒப்பந்த காலம் முடிந்ததும், 2004ல் மாநகராட்சி வசம் மீண்டும் ஒப்படைக்கவில்லை.சிறுவாணி அணை கட்டுமானம்; திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கு தேவையான செலவுகளை மாநகராட்சி நிர்வாகமேசெய்தது. இருந்தாலும், சிறுவாணியில் இருந்து தருவிக்கப்படும் குடிநீருக்கு கட்டணம் செலுத்தச் சொல்லி, மாநகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாதந்தோறும் நோட்டீஸ் வழங்கி வருகிறது.இதுதவிர, அணை பராமரிப்புக்கென தனியாக நிதி பெற்று வருகிறது; இதற்காக மட்டுமே, 100 கோடி ரூபாய் வரை மாநகராட்சி வழங்கியிருக்கிறது. ஆனால், மாநகராட்சிக்கு தேவையான அளவு தண்ணீர் சிறுவாணியில் இருந்து எடுத்து தருவதில்லை.கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி, அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க, குடிநீர் வடிகால் வாரியத்தினர் முயற்சிப்பதில்லை.மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்தால், இரு மாநில அரசு உயரதிகாரிகளும் பேச்சு நடத்தி தீர்வு காண்பார்கள் என கூறி, குடிநீர் வடிகால் வாரியத்தினர் பதுங்கிக் கொள்கின்றனர்.அதனால், இதற்கு முன் இருந்ததை போல், அணையை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சியே மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என, 2023, ஆக., மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.நகராட்சி நிர்வாக ஆணையரக இயக்குனர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் ஆலோசித்துள்ளார். சிறுவாணி அணை வரலாறு, பராமரிப்பு, செலவினம், ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் சவால்கள் குறித்து, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன், மாநகராட்சி கமிஷனர் ஆலோசித்தார்.

சுமுக உறவு தேவை

சிறுவாணி அணை, கேரள வனப்பகுதியில் அமைந்திருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் சுமுக உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் தினமும் சிறுவாணிக்கு சென்று வருவர்; அங்குள்ள அலுவலர்களுடன் நட்புடன் பழகி வந்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வசம் சென்ற பின், அத்தகைய நல்லுறவு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தேவிகா
மே 19, 2024 11:57

ரெண்டுபேரும் திராவிடனுங்க தான். திறமை பத்தாது. டெடிகேஷனும் கிடையாது. லன்ஹ்சம், ஆட்டை மட்டும்தான் இருக்கும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை