உலக சிலம்பம் சாம்பியன்ஷிப்: இந்திய அணி சூடியது மகுடம்
கோவை : கேரளாவில் நடந்த, உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.உலக சிலம்பம் சம்மேளனம் சார்பாக, உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2024, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, ஜிம்மி ஜார்ஜ் உள் விளையாட்டு அரங்கில், கடந்த 4 முதல் 6ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், வங்கதேசம், வியட்நாம் உட்பட ஒன்பது நாடுகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்த போட்டி, ஆடவர் - மகளிர் மினி சப்-ஜூனியர், சப் -- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் போன்ற 4 வகையான வயது அடிப்படையில், 13 விளையாட்டு உள்பிரிவாக நடந்தது. இதில், இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை, சிங்கப்பூர் அணியும், மூன்றாவது இடத்தை இலங்கை அணியும் வென்றன.