உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரப்பெருக்கு நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

மரப்பெருக்கு நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், சுற்றுச்சூழலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குன்னிகண்ணன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியபோது, நிலச்சீரழிவு, வறட்சியால் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இயற்கை சீற்றங்களால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை குறித்து விளக்கினார். சுற்றுச்சுழல் மாசுபாடு மற்றும் வெள்ளம் நிலத்தடி நீர் எவ்வாறு மாசுபடுத்துகிறது என்பதையும் விளக்கினார். தலைமை விஞ்ஞானி ரேகா ஆர்.வாரியர் தனது அறிமுக உரையில், நடப்பு ஆண்டின் சுற்றுச்சூழல் குறித்த கருப்பொருள் மற்றும் இந்த தலைமுறையின் மறுசீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிநபரின் பங்கு, உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் நுண்ணறிவு பற்றி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ