உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி, நேற்று நடைபெற்றது.பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளர் தமிழ்வேந்தன் கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வெள்ளை நிற தொப்பியை அணிந்து, ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் அதனைப் பாதுகாப்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, சுற்றுச்சூழல் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு, மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியம், பேராசிரியர் வெங்கடேச பழனிசாமி, வேளாண்மை முதன்மையர் மரகதம், மாணவர் நல மைய முதன்மையர் தேவகி, சுற்றுசூழல் அறிவியல் துறை மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ