உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளி கொலை வாலிபர் கைது

தொழிலாளி கொலை வாலிபர் கைது

கோவை;கூலி தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கோவை, இருகூர் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன், 59 கூலி தொழிலாளி. இருகூர் சாமியார் மேடை, ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கருப்பசாமி, 40. ஒரே பகுதியில் இருப்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருப்பசாமி குத்தகைக்கு வீடு எடுத்துத்தருமாறு முத்து கிருஷ்ணனிடம் ரூ. ஒரு லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்து கிருஷ்ணன் நீண்ட நாட்களாக வீடு தேடி தராமல் இருந்துள்ளார். பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால், முத்து கிருஷ்ணன், கருப்பசாமி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், கருப்பசாமி வீட்டில் இருவரும் மது அருந்தி உள்ளனர். மது போதையில் பணத்தை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கருப்பசாமி அடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முத்து கிருஷ்ணன் உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மணிசேகர்,31 அளித்த புகாரின்படி, சிங்கநல்லுார் போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி