உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 105 குவா குவா

அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 105 குவா குவா

வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டில், 105 குழந்தைகள் பிறந்துள்ளன.வால்பாறை அரசு மருத்துவமனையில், சமீப காலமாக குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக இங்கு வசதிகள் உள்ளதால், மாதம் தோறும் குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு அரசு மருத்துவமனையில், 105 குழந்தைகள் பிறந்துள்ளன.வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு, 29 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.இதுகுறித்து, வால்பாறை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஸ்ஆனந்தியிடம் கேட்ட போது, ''அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளதால், எந்தவித சிரமமும் இல்லாமல் சுசுப்பிரசவம் நடக்கிறது.வால்பாறை அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டு, 105 குழந்தைகள் பிறந்துள்ளன. இது வரை, 40 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரு கர்ப்பிணிகளுக்கு ஆபிரேஷன் வாயிலாக பிரசவம் நடந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்